வாலிபரை தாக்கியவர் கைது

திருக்கோவிலூர், ஜன. 11:  திருக்கோவிலூர் அடுத்த தாசர்புரம் பகுதியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி மகன் ஆறுமுகம்(29). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சுந்தரமூர்த்தி மகன் அருள்(29) என்பவருக்கும் தீபாவளி பண்டிகையின் போது பிரச்னை ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று ஆறுமுகத்தை, அருள் ஆபாசமாக திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து ஆறுமுகம் கொடுத்த புகாரின் பேரில் அருள் மீது போலீசார் வழக்கு பதிந்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

× RELATED வாலிபர் பலி