பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை: கடைகளில் திடீர் ஆய்வு

திண்டிவனம், ஜன. 11:  தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கடந்த 1ம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பல்வேறு பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்கள் கடைகள் மற்றும் வணிக வளாகங்களில் பயன்படுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.இந்நிலையில், திண்டிவனம் நகராட்சி கமிஷனர் பிரகாஷ், துப்புரவு ஆய்வாளர் ராமநாதன், துப்புரவு அலுவலர் லிப்டன் சேகர் ஆகியோர் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என பல்வேறு கடைகள் மற்றும் வணிக வளாகங்களில் ஆய்வு செய்தனர். இதில் பிளாஸ்டிக் பயன்படுத்திய ஒரு சில கடைகளில் இனிமேல் பயன்படுத்தக்கூடாது என எச்சரிக்கை விடுத்தனர்.

Advertising
Advertising

Related Stories: