பயனில்லாமல் கிடக்கும் குப்பை சேகரிக்கும் வண்டி

திண்டிவனம், ஜன. 11:  திண்டிவனம் அடுத்த சிங்கனூரில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் மரக்காணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சார்பில் கிராமங்கள் தோறும் குப்பைகளை சேகரிக்க வாகனமும் அதற்கான பணியாளர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதே போல சிங்கனூருக்கும் குப்பை சேகரிக்கும் பணியாளர்களுக்கும் வாகனம் வழங்கப்பட்டுள்ளது. இந்த வாகனம் சிங்கனூர் சாலை ஓரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு பல மாதங்களாக பராமரிக்கப் படாமலும் பயன்படுத்தப்படாமலும் உள்ளது.  இதனால் இந்த ஊரில் உள்ள சாலை ஓரங்களில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றது. இதனால் கொசு அதிகளவில் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு சாலையோரங்களில் குவிந்துகிடக்கும் குப்பைகளை அப்புறப்படுத்துவதுடன் அரசு செலவு செய்து வாங்கிய வாகனங்களையும் பராமரிக்க வேண்டும் என இப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Advertising
Advertising

Related Stories: