முதன் முறையாக கள்ளக்குறிச்சிக்கு வந்த எம்எல்ஏவுக்கு உற்சாக வரவேற்பு

கள்ளக்குறிச்சி, ஜன. 11:கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்கப்பட்ட பின்னர் முதன் முறையாக கள்ளக்குறிச்சி நகர பகுதிக்கு நேற்று மாலை வருகை தந்த பிரபு எம்எல்ஏவுக்கு கள்ளக்குறிச்சி டோல்கேட் பகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றகழகம், விழுப்புரம் தெற்கு மாவட்ட கழக செயலாளர் கோமுகிமணியன் தலைமையில் நிர்வாகிகள், தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி பிரபு எம்எல்ஏவுக்கு மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து, 100க்கும் மேற்பட்ட வாகனங்களில் ஊர்வலமாக கள்ளக்குறிச்சி நகரபகுதிக்கு சென்று பஸ்நிலையம் பகுதியில் உள்ள அண்ணா, எம்ஜிஆர் சிலைக்கு பிரபு எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் பிரபு எம்எல்ஏ பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட அவைத்தலைவர் பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள்மதுசூதனன், தங்கதுரை,மாவட்டபிற அணி செயலாளர்கள் ஜெ பேரவை அணி பால்ராஜ், மாணவரணி சீனுவாசன், வழக்கறிஞர் அணி சம்பத்குமார், சிறுபான்மை பிரிவு பரத்.பாசறை மன்சூர், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் அமுதமொழி, மாவட்ட மகளிர் அணி தலைவி தனலட்சுமி, ஒன்றிய செயலாளர்கள் ராஜேந்திரன், மூர்த்தி, பாலாஜி, சந்திரசேகர், முருகதாஸ், நகர செயலாளர் ராம்குமார் உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய, நகரநிர்வாகிகள் 1000க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பிரபு எம்எல்ஏவுக்கு உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.

× RELATED கள்ளக்குறிச்சி அருகே 12-ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை