6010 குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு வழங்கல்

கள்ளக்குறிச்சி, ஜன. 11: தியாகதுருகம் அடுத்த வடதொரசலூர் கிராமத்தில் உள்ள பெரியமாம்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் தமிழக அரசின் சார்பில் குடும்ப அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கூட்டுறவு சங்க தலைவர் அய்யப்பா தலைமை தாங்கி 6010 குடும்பங்களுக்கு தமிழக முதலமைச்சர் அறிவித்த ஆயிரம் ரூபாய் மற்றும் வேட்டி, சேலை, அரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு வழங்கி தொடங்கி வைத்தார். கூட்டுறவு சங்க தலைவர்கள் குமரவேல், குமாரசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 கூட்டுறவு சங்க செயலாளர் குப்புசாமி  வரவேற்றார். நிகழ்ச்சியில் மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜான்பாஷா, ஒன்றிய பேரவை செயலாளர் செல்வராஜ், அண்ணா ஓட்டுநர் சங்க செயலாளர் ரமேஷ், மாவட்ட பிரதிநிதி புஷ்பவள்ளி,  அதிமுக நிர்வாகிகள் சிவா, மதியழகன், ராமு, அய்யாக்கண்ணு, ரங்கநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

× RELATED உடுமலையில் நடந்த ஜமாபந்தியில் ஆதரவற்ற மாணவிக்கு ‘பிறந்தநாள் பரிசு’