×

உளுந்தூர்பேட்டையில் வீடுகளுக்கு அருகில் மின்கம்பங்கள்: பொதுமக்கள் கடும் அவதி

உளுந்தூர்பேட்டை, ஜன. 11:  உளுந்தூர்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 18 வார்டுகள் உள்ளது. இதில் சுமார் 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வரும் நிலையில், பேரூராட்சியின் முக்கிய பகுதியாக உள்ள கந்தசாமிபுரம், கார்னேஷன் தெரு, அன்னை சத்யாதெரு, மிளகுமாரியம்மன் கோயில் தெரு, பாரிவள்ளல் தெரு, காயிதே மில்லத்தெரு, அண்ணாநகர், பச்சையப்பா நகர், சிவகுருநாதன், உ.கீரனூர், மாடல்காலனி, அன்னை தெரசா நகர், உளுந்தாண்டார்கோயில் உள்ளிட்ட முக்கிய தெருக்களில் அதிக அளவிலான குடியிருப்புகள் உள்ளது.

இந்த பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக மத்திய அரசின் மின்சாரம் வழங்கும் திட்டத்தின்கீழ் புதிதாக மின்சார கம்பங்கள், மின் மாற்றிகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த மின்மாற்றிகள் மற்றும் மின்கம்பங்கள் அமைப்பதற்கான கால கெடு முடியும் தருவாயில் உள்ளதாக கூறி 50க்கும் மேற்பட்ட மின்வாரிய ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் துரித கதியில் மின்கம்பங்களை நட்டு மின் இணைப்பு கொடுத்து வருகின்றனர்.

இதனால் தினந்தோறும் உளுந்தூர்பேட்டை நகரப்பகுதியில் மின்சாரம் துண்டிப்பு ஏற்பட்டு வருவது ஒரு புறம் இருக்க, தெருவுக்கு தெரு ஏற்கனவே உள்ள மின்சார கம்பங்களுக்கு அருகில் புதியதாக மின்கம்பங்கள் நடப்பட்டு புதிய மின் இணைப்பு மற்றும் மின்மாற்றிகள் அமைக்கப்பட்டு வருவதால் ஒவ்வொரு தெருவிலும் வீடுகளுக்கு அருகில் மரம் இருக்கிறதோ, இல்லையோ வீட்டிற்கு ஒரு மின்கம்பங்கள் உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி
உள்ளனர். இதனால் வரும் காலங்களில் வீடுகள் கட்டுமான பணிகள் பாதிக்கப்படும் என்றும், இந்த மின்கம்பங்களை மாற்ற வேண்டும் என்றால் இதற்கான மின்வாரிய அலுவலகத்தில் குடியிருப்பு வாசிகள் உரிய கட்டணம் செலுத்தினால்தான் மாற்ற முடியும் என்ற நிலை உள்ளதால், இது போல் தெருவுக்கு தெரு அதிக அளவு மின்கம்பங்கள் மற்றும் மின்மாற்றிகள் அமைக்கப்பட்டு வருவதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருவதாக தெரிவித்து உள்ளனர்.

தொடர்ந்து அதிக அளவிலான மின்கம்பங்கள் குடியிருப்பு பகுதியில் நடப்பட்டு வருவதால் பொதுமக்கள் செய்வது தெரியாமல் தவித்து வருகின்றனர்.
இது குறித்து மாவட்ட மின்வாரிய அதிகாரிகள் பேரூராட்சி பகுதியில் உரிய விசாரணை செய்து தேவையற்ற பழைய மின்கம்பங்களை அகற்றிவிட்டு, குடியிருப்பு வாசிகளுக்கு இடையூறு இல்லாமல் மின்கம்பங்களை நடுவதற்கு உரிய வழிவகை செய்ய வேண்டும் என பொதுமக்கள் மின்வாரிய அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : homes ,Citizens ,
× RELATED இல்லங்களில் இனிய வேல் பூஜை