மாணவர் சிறப்பு பஸ்களுக்கு அபராதம்

புதுச்சேரி,  ஜன. 11: புதுவையில் பள்ளி- கல்லூரி மாணவர்களுக்காக பிஆர்டிசி சார்பில் 3  சிறப்பு பேருந்து களும், தனியார் சார்பில் 55 சிறப்பு பேருந்துகளும்  இயக்கப்பட்டு வருகிறது. இந்த சிறப்பு பேருந்து உரிமையாளர்களுடனான ஆலோசனை  கூட்டம் போக்குவரத்து (கிழக்கு) எஸ்பி அலுவலகத்தில் நேற்று முன்தினம்  நடந்தது.போக்குவரத்து எஸ்பி வம்சிதர ரெட்டி தலைமையில் நடைபெற்ற  இக்கூட்டத்தில் இன்ஸ்பெக்டர்கள் ஜெயராமன், முருகையன் மற்றும் மாணவர்  பேருந்து உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் பேருந்து களின்  பராமரிப்பு, மாணவர்களின் பாதுகாப்பு, டிரைவர்களின் நன்னடத்தை, பஸ்களை  நிறுத்த வேண்டிய இடங்கள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர்  மாணவர் சிறப்பு பஸ்களை கடலூர் சாலை ஏஎப்டி திடலில் நிறுத்த  அறிவுறுத்தப்பட்டது.

இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் கடலூர் சாலையில்  ஆங்காங்கே மாணவர் சிறப்பு பஸ்களை டிரைவர்கள் காலையில் சவாரியை  முடித்துவிட்டு நிறுத்தி விட்டு சென்றிருந்தனர். இதுதொடர்பாக புகார் வரவே,  போக்கு வரத்து கிழக்கு சரக போலீசார் அப்பகுதிக்கு சென்று தடை செய்யப்பட்ட  இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மாணவர் சிறப்பு பஸ்களில் அபராதம்  விதிக்கப்பட்டதற்கான (சம்மன்) நோட்டீஸ்களை ஓட்டிவிட்டுச் சென்றனர்.

பின்னர்  அந்த பஸ்களை இயக்க வந்த டிரைவர்கள் நோட்டீஸ் ஒட்டப்பட்டிருப்பதை பார்த்து  அதிர்ச்சியடைந்தனர். இதுபற்றி உரிமையாளர்

களுக்கு தகவல் கொடுத்து அபராதம்  செலுத்திய பிறகே பஸ்களை எடுத்து சென்றனர்.

Related Stories: