200கி. பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

குறிஞ்சிப்பாடி, ஜன. 11: குறிஞ்சிப்பாடி பேரூராட்சியில் 200 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.தமிழகத்தில் கடந்த 1ம் தேதி முதல் உணவு பொருட்களை அடைக்க பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள், தண்ணீர் பாக்கெட், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல், பிளாஸ்டிக் கொடிகள் உள்பட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.இந்த தடை உத்தரவை வணிகர்கள் பின்பற்றுகின்றனரா என்று குறிஞ்சிப்பாடி பேரூராட்சி செயல் அலுவலர் சக்கரவர்த்தி தலைமையில், சுகாதார ஆய்வாளர் குருசங்கர், அலுவலர் முருகவேல் மற்றும் பணியாளர்கள் கடைகளில் திடீர் ஆய்வு செய்தனர். குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம், பெருமாள் கோயில் பேருந்து நிறுத்தம், கடைவீதி உள்ளிட்ட 18 வார்டுகளிலும் நடத்திய அதிரடி சோதனையில் 200 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இனிவரும் காலங்களில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது. இதற்கு மாற்றாக அறிவித்துள்ள பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினர். இதனையும் மீறி பயன்படுத்தினால் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று எச்சரித்தனர்.

× RELATED காரிமங்கலம், கடத்தூரில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்