கோயில் உண்டியல் திறப்பு

பண்ருட்டி, ஜன. 11: பண்ருட்டி அடுத்த திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயில் இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோயிலில் பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை எண்ணும் நிகழ்ச்சி செயல் அலுவலர் நாகராஜன் தலைமையில் நடந்தது. இதில் ஆய்வாளர் ஜெயசித்ரா முன்னிலையில் மகளிர் சுய உதவிகுழுவினருடன் உண்டியல் பணம் எண்ணப்பட்டது. இதில் ரூ.2,08,637 வசூலானது. இத்தொகையை தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் செலுத்தப்பட்டது.


× RELATED நீர் திறப்பதை கண்காணிக்க...