×

கண்காணிப்பு கேமரா அமைப்பு

பண்ருட்டி, ஜன. 11: கடைகள், போக்குவரத்து மிகுந்த சாலைகள் ஆகியவற்றில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும், அவ்வாறு செய்தால் பல்வேறு குற்ற நிகழ்வுகள் தடுக்க முடியும் என கடலூர் மாவட்ட எஸ்பி சரவணன் கூறியிருந்தார். இதன் பேரில் புதுப்பேட்டையில் போக்குவரத்து மிகுந்த சாலையான மடப்பட்டு ரோடு, பண்ருட்டி ரோடு, ஏரிப்பாளையம் ரோடு ஆகிய பகுதிளில் 3 கேமராக்கள் நேற்று பொருத்தப்பட்டது. மேலும் பல்வேறு முக்கிய பகுதிளில் கேமரா அமைப்பதற்கு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

நெய்வேலி: நெய்வேலி அடுத்த ஊமங்கலம் போலீஸ் ஸ்டேஷன் கட்டுப்பாட்டில் உள்ள அரசக்குழி பகுதிகளில் தொடர்ச்சியாக சாலை விபத்துகள் ஏற்பட்டு வந்தன. இந்த இடங்களை கண்டறிந்து அப்பகுதியில் எச்சரிக்கை பலகை வைப்பதுடன், விபத்து தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். மேலும் திருட்டு, கொள்ளை, வழிப்பறி போன்ற சம்பவங்களை தடுக்க சிசிடிவி கேமரா பொருத்த ஆலோசனைகள் சமீபத்தில் நடத்தப்பட்டது.

இதன்படி ஊமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையில் போலீசார் அரசக்குழி  பஸ் நிலையத்தில் விபத்து தடுப்பு பலகை வைத்து சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து குற்ற சம்பவங்களை தடுப்பதுடன், திருட்டு போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வரும் நபர்களை எளிதில் கண்டறிந்தது உடனடியாக நடவடிக்கை எடுக்க உதவியாக இருக்கும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

Tags :
× RELATED திண்டிவனத்தில் 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்