வளர்ச்சி மாவட்டமாக கடலூரை மாற்ற வேண்டும்

குறிஞ்சிப்பாடி, ஜன. 11: குறிஞ்சிப்பாடி காவல் நிலையம் சார்பில் குற்றமற்ற சமுதாயத்தை உருவாக்குவோம் என்று மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. ஆய்வாளர் ராமதாஸ் வரவேற்றார். டிஎஸ்பி சரவணன் முன்னிலை வகித்தார்.
மாவட்ட எஸ்பி சரவணன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசுகையில், கடலூர் மாவட்டத்தில் பலர் நன்றாக படித்து பல உயர்ந்த பதவிகளுக்கு சென்றுள்ளனர். அவ்வாறு முன்னேறியவர்கள் கடைபிடித்த அடிப்படை ஒழுக்கும், தன்னம்பிக்கை, விடாமுயற்சி இவைகள் அனைத்தையும், மாணவர்களும் கடை பிடிக்க வேண்டும். ஒரு சிறந்த வளர்ச்சி மாவட்டமாக கடலூரை மாற்றி காட்டவேண்டும். அதற்கு பதின்பருவத்தில் எவ்வித குற்றச் செயல்களிலும் ஈடுபடாமல், நீங்கள் ஒவ்வொருவரும் நன்கு படித்து வாழ்வில் பல சாதனைகள் படைக்க வேண்டும் என்றார்.

மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு வாசகங்கள் அச்சிட்ட நோட்டு, புத்தகம் மரக்கன்றுகளை வழங்கினார்.மாணவிகளுக்கு தொடுதல் பற்றி மிகவும் எளிமையாக புரியும் வகையில் மாவட்ட மகிளா நீதிமன்ற அரசு வழக்கறிஞர் செல்வப்பிரியா எடுத்துரைத்தார். வடலூர் போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளர் வெங்கடேசன், பெண்கள் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் லட்சுமி, ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கனகசபை மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள், மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். உதவி ஆய்வாளர் பிரசன்னா நன்றி கூறினார்.

× RELATED கடலூர் நகர் பகுதியில் இன்று குடிநீர் கட் கடலூர்,