×

சிதம்பரம் கோயிலில் தனுர் வியதீபாதம்


சிதம்பரம், ஜன. 11: மார்கழி மாதம் என்றாலே தெய்வங்களுக்கு உகந்த மாதம் என கூறப்படுகிறது. மார்கழி மாதத்தில் வியதீபாதம் என்றும் யோகம் வரும் நாளில் நடராஜ பெருமானை தரிசனம் செய்வது சர்வ பாவங்களையும் நீக்கி பெரும் புண்ணியங்களையும், அனைத்து செல்வங்களையும் தரவல்லது என கருதப்படுகிறது. மார்கழி மாதத்தில் தினமும் சாமி தரிசனம் செய்யும் பலன்கள் அனைத்தும் வியதீபாத தினத்தில் தரிசனம் செய்தால் கிடைக்கும் என்றும் வியதீபாதம் என்ற சொல் நாள்பட மாறி விதிபாதம், மிதிபாதம் என மாறிவிட்டதாக கூறப்படுகிறது.

தனுர் வியதீபாத யோகமான நேற்று அதிகாலை 4 மணி முதல் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிவகாமசுந்தரி சமேத நடராஜ பெருமானை திருபள்ளியெழுச்சி நேரத்தில் வழிபட்டனர். பின்னர் கோயில் பிரகாரம் மற்றும் நான்கு ரத வீதிகளையும் வலம் வந்தனர். அதிகாலையில் அதிகளவில் பக்தர்கள் வீதியுலா வந்ததையொட்டி நான்கு முக்கிய வீதிகளிலும் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

Tags : Dhanur Vyadapatham ,
× RELATED வாய்க்காலில் சடலமாக கிடந்த ஆண் சிசு