புவனகிரி தொகுதியில் திமுக ஊராட்சி சபை கூட்டம்

சேத்தியாத்தோப்பு, ஜன. 11: சேத்தியாத்தோப்பு அடுத்த வளையமாதேவியில் திமுக சார்பில் நடந்த ஊராட்சி சபை கூட்டத்திற்கு ஒன்றிய அவைத்தலைவர் செல்வராசு தலைமை தாங்கினார். புவனகிரி ஒன்றிய செயலாளர் மதியழகன், மாவட்ட விவசாய அணி ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய பொருளாளர் முத்துராமலிங்கம் வரவேற்றார். புவனகிரி எம்எல்ஏ சரவணன் கலந்துகொண்டு கிராம மக்களிடையே குறைகளை கேட்டறிந்தார்.

தண்ணீர் பற்றாக்குறை, பழுதடைந்துள்ள சாலை, செயல்படாத பொதுக்கழிப்பிடம், எரியாத தெருவிளக்குகள் என பல்வேறு குறைகளை பொதுமக்கள் கூறினர். இதற்கு பதிலளித்த எம்எல்ஏ சரவணன் குறைகளை சீர் செய்து கொடுப்பதாக உறுதியளித்தார். மேலும், என்.எல்.சி., நிறுவனம் 3வது சுரங்கத்திற்கு நிலம் கையகப்படுத்த திட்டமிட்டுள்ளதற்கு கிராம மக்கள் அனைவரும் ஒரு பிடி மண் கூட கொடுப்பதில்லை என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றினர். இதேபோல கத்தாழை, அம்மன்குப்பம், எறும்பூர் உள்ளிட்ட கிராமங்களில் திமுகவின் ஊராட்சி சபை கூட்டம் நடந்தது.

× RELATED பிரதமரிடம் திமுக மனு