×

சிதம்பரம் நகரில் சிசிடிவி கேமரா

சிதம்பரம், ஜன. 11: சிதம்பரம் நகர காவல் நிலைய வளாகத்தில் ரூ.58 லட்சம் செலவில் போக்குவரத்து காவல் நிலையம் நவீன வசதிகளுடன் புதியதாக கட்டப்பட்டது. இதனை நேற்று காலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதனையடுத்து போக்குவரத்து காவல் நிலையத்தில் கடலூர் மாவட்ட எஸ்பி சரவணன் குத்துவிளக்கேற்றி பணிகளை துவக்கி வைத்தார்.பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், சிதம்பரத்தில் குற்ற நடவடிக்கைகளை தடுக்க அனைத்து பகுதிகளிலும் சிசிடிவி கேமரா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதே போன்று நகரில் இயங்காத சிக்னல்களை இயங்க வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

 மாவட்டம் முழுவதும் மக்கள் பிரச்னைகளை தெரிவிக்க வாட்ஸ் ஆப் நம்பர் தெரிவிக்கப்பட்டு அதனை 79 இடங்களில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் நகரில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் ஆட்டோ ஓட்டுநர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
நிகழ்ச்சியில் டிஎஸ்பி பாண்டியன், இன்ஸ்பெக்டர் குமார், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் மகாலிங்கம், செல்வநாயகம் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Tags : Chidambaram ,
× RELATED சிதம்பரம் நாடாளுமன்ற ெதாகுதி தேர்தல் செலவின பார்வையாளர் நியமனம்