போதை விழிப்புணர்வு பேரணி

சிதம்பரம், ஜன. 11: சிதம்பரம் கோட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில் போதை விழிப்புணர்வு பேரணி நடந்தப்பட்டது. சிதம்பரம் காசுக்கடை தெருவில் நடந்த நிகழ்ச்சியில் சப்-கலெக்டர் விசுமகாஜன் பேரணியை தொடங்கி வைத்தார். பேரணியில் அரசு உதவி பெறும் பள்ளியான ஆர்சிடி பள்ளி மாணவர்கள் பங்கேற்று போதை விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர். போதையில் ஆடாதே, பாதியில் போய்விடாதே உள்ளிட்ட மாணவர்கள் எழுப்பிய முழக்கங்கள் மக்களை கவர்ந்தது. நிகழ்ச்சியில் சிதம்பரம் கோட்ட கலால் அலுவலர் செல்வகுமார், பள்ளி தலைமை ஆசிரியர் செல்வகுமார், கலால் ஆய்வாளர் சோமசுந்தரம், முதுநிலை வருவாய் ஆய்வாளர் செல்வம், நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பேரணி மேலவீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக மீண்டும் காசுக்கடை தெருவில் நிறைவு பெற்றது.

× RELATED போதை பொருள் விழிப்புணர்வு பேரணி