விவசாயிக்கு கத்தி வெட்டு: ஒருவர் கைது

பண்ருட்டி, ஜன. 11: பண்ருட்டி அருகே புலவனூர் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் தர்மலிங்கம் (45).. இவருக்கும், இதே பகுதியை சேர்ந்த உறவினர் பெரியசாமி மகன் தினகரன் (47) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளாக நிலப்பிரச்னை காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை தர்மலிங்கம் தனது நிலத்துக்கு ஏர் ஓட்டுவதற்காக சென்றார். அப்போது அங்கிருந்த தினகரன், அவரது மனைவி சாந்தி ஆகியோர் தர்மலிங்கத்திடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதில் மேலும் ஆத்திரமடைந்த தினகரன், தர்மலிங்கத்தை கத்தியால் வெட்டியுள்ளார். இதில் வலது கையில் 2 விரல்கள் துண்டானது. இதுகுறித்த புகாரின் பேரில் பண்ருட்டி சப்-இன்ஸ்பெக்டர் ஜவ்வாது உசேன் வழக்குப்பதிந்து தினகரனை கைது செய்தார். தலைமறைவாக உள்ள அவரது மனைவி சாந்தியை போலீசார் தேடி வருகின்றனர்.

× RELATED முன்விரோதத்தில் பழிவாங்க கத்தியுடன் சுற்றிய ஊர்க்காவல் படை வீரர் கைது