கடலூர் நகராட்சியை கண்டித்து கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்

கடலூர், ஜன. 11: கடலூர் நகராட்சியை கண்டித்து அனைத்து பொது நல இயக்கங்களின் கூட்டமைப்பினர் தலைமை அஞ்சல் நிலையம் அருகில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். தரமற்ற குடிநீர் வினியோகம், எரியாத தெருவிளக்குகள், பாதாள சாக்கடையால் சாலைகள் பாதிப்பு, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றாத நகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் குமார் தலைமை தாங்கினார். இணை ஒருங்கிணைப்பாளர்கள் குரு ராமலிங்கம், சுப்புராயன், ரவி, சிவாஜி கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சண்முகம் வரவேற்றார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலர் சேகர், விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் திருமாறன் மாநில அமைப்பு செயலாளர் திருமார்பன் மற்றும் பலர் உரையாற்றினர். ராஜசேகர் நன்றி கூறினார்.

× RELATED வாய்க்காலில் தேங்கி நிற்கும்...