விருத்தாசலம் ஓட்டல்களில் பிளாஸ்டிக் கவர் பயன்பாடு

விருத்தாசலம், ஜன. 11: விருத்தாசலம், மங்கலம்பேட்டை, பெண்ணாடம் ஆகிய பகுதிகளில் உள்ள ஓட்டல்களில், சட்னி, சாம்பார் கட்டுவதற்காக சில்வர் நிற பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்துகின்றனர். அரசு தடை விதித்தும் கூட, ஒரு முறை பயன்படுத்தும் இந்த வகை பிளாஸ்டிக் கவர்களை ஓட்டல்களில் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். எனவே விருத்தாசலம், மங்கலம்பேட்டை, கம்மாபுரம் பகுதிகளில் உள்ள ஓட்டல்களில் பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்துவதை தடுத்து நிறுத்தி விரைந்து நடவடிக்கை எடுத்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து நகராட்சி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, இதுபோன்ற பிளாஸ்டிக் கவர்களை உணவு அலுவலகங்களில் பிடிப்பது, பறிமுதல் செய்வது, உணவு பாதுகாப்பு அதிகாரிகளின் வேலை. அவர்கள்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் அவர்கள் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர். இதனால்  பொதுமக்கள் எங்களிடம் அடிக்கடி கேள்வி எழுப்பி வருகின்றனர் என்று தெரிவித்தார்.

× RELATED ஆதி திராவிடர் விடுதிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்