பெண்ணை மிரட்டிய வாலிபர் மீது வழக்கு

திருக்கோவிலூர், ஜன. 11:  திருக்கோவிலூர் அடுத்த காரணை பெரிச்சானூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன் மகள் மோனிஷா(18). சம்பவத்தன்று இவர் வெளியே சென்றபோது, பின்னால் சென்ற அதே ஊரைச் சேர்ந்த சாரங்கபாணி மகன் குட்டி என்பவர் மோனிஷாவின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியுள்ளார்.  பின்னர் கூச்சலிட்டவிடன் குட்டி அங்கிருந்து தப்பி ஓடினார். இது குறித்து மோனிஷாவின் தந்தை கோவிந்தன் கண்டாச்சிபுரம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் குட்டி மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

× RELATED தொழிலாளியை தாக்கிய 3 பேர் மீது வழக்கு