திமுக சார்பில் ஊராட்சி சபை கூட்டம்

கூடுவாஞ்சேரி, ஜன.11: காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வேங்கடமங்கலம், நல்லம்பாக்கம், ஊனைமாஞ்சேரி ஆகிய மூன்று ஊராட்சிகளில் திமுக சார்பில் ஊராட்சி சபை கூட்டம் நேற்று முன்தினம் மாலை  நடைபெற்றது.  வேங்கடமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட ரத்தினமங்கலம் கிராமத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் விஜயகுமார், நல்லம்பாக்கம் ஊராட்சியில் ஊராட்சி கழக செயலாளர் சங்கர்,  ஊனைமாஞ்சேரி ஊராட்சியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜே.வி.எஸ்.ரங்கநாதன் ஆகியோர் தலைமை தாங்கினர். முக்கிய நிர்வாகிகள், கூடுவாஞ்சேரி பத்மநாபன், ஆப்பூர் சந்தானம், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஏவிஎம் இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் எம்.கே.டி.கார்த்திக்  அனைவரையும் வரவேற்று பேசினார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் வரலட்சுமிமதுசூதனன் எம்எல்ஏ, காட்டாங்கொளத்தூர் ஒன்றிய செயலாளர் எம்.கே.தண்டபாணி ஆகியோர்  கலந்துகொண்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பிற்கிணங்க மக்களிடம் ‘’செல்வோம், மக்களிடம் சொல்வோம், மக்கள் மனதை வெல்வோம்’’ என்ற தலைப்பில் லட்சிய முழக்கத்தை முன்வைத்து ஊராட்சி சபை  கூட்டத்தை தொடங்கி வைத்தனர்.

இதில் மகளிர் சுயஉதவிகுழுவினர், பெண்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். அப்போது பொதுமக்கள் ஏராளமானோர் அங்கன்வாடி மையம் சீரமைத்தல், கட்டி முடிக்கப்பட்டு பல ஆண்டுகளாக திறக்கப்படாத  ரேசன் கடையை திறக்க கோரியும், பொது சுகாதார கழிப்பிடங்களை பராமரிக்க வலியுறுத்தியும், பள்ளிகளுக்கு சுற்றுசுவர் அமைக்க கோரியும், சாலை, குடிநீர், தெருவிளக்கு, பஸ் வசதி, இலவச வீட்டுமனை பட்டா உள்ளிட்ட  அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தரக்கோரி மனுக்களை கொடுத்தனர். இதில், நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

× RELATED நீட் ஒழிப்பு கூட்டமைப்பு சார்பில் ஓசூரில் நினைவேந்தல் கூட்டம்