1420 குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு

பெரும்புதூர், ஜன.11: குன்றத்தூர் ஒன்றியம் ஒரத்தூர் ஊராட்சியில் ஒரத்தூர், நீலமங்கலம், மேட்டுகாலனி, கீழக்கழனி, வரதராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 1420 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். தற்போது தமிழக அரசு  அறிவித்துள்ள பொங்கல் பரிசு பொருட்கள் மற்றும் ₹ 1000 பணம் வழங்கும் விழா ஒரத்தூர், நீலமங்கலம் ரேஷன் கடைகளில் நடைபெற்றது. விழாவில் மணிமங்கலம்-படப்பை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி இயக்குனர் ஒரத்தூர் சுந்தர் கலந்து கொண்டு 1420 குடும்பங்களுக்கு இலவச பொங்கல் பரிசு பொருட்கள் மற்றும் ₹ 1000 பணத்தை வழங்கினார்.  விழாவில் முன்னாள் ஊராட்சி தலைவர் கற்பகம் சுந்தர், வனக்குழு தலைவர் சுபாஷ் மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

 இதேபோல் பெரும்புதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் வெங்காடு உலகநாதன் வடமங்கலம் கிராமத்தில் வீடு வீடாக சென்று பொது மக்களுக்கு பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கினார். குன்றத்தூர்  ஒன்றியம் படப்பை ஊராட்சியில் இலவச பொங்கல் பொருட்கள் வழங்கும் விழாவில் பெரும்புதூர் எம்.எல்.ஏ., பழனி, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் எழுச்சூர் ராமசந்திரன்  ஆகியோர் இலவச பொங்கல் பொருட்கள் மற்றும் பணத்தை வழங்கினர்.
அதிமுக பொதுக்குழு உறுப்பினர் ராஜமாணிக்கம், மணிமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் ரவிச்சந்திரன், படப்பை மாரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


× RELATED பரிசு பொருட்களுக்கு பதிலாக மரக்கன்றுகள் வழங்கும் திட்டம்