பெண் இன்ஸ்பெக்டரை திட்டியவர் கைது

சென்னை, ஜன. 11:திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே சிறுவாபுரியில் புகழ்பெற்ற முருகன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் கடந்த 1ம் தேதி ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி  தரிசனம் செய்தனர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர், எஸ்ஐ உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.ஊத்துக்கோட்டை அனைத்து மகளிர் காவல்நிலைய பெண் இன்ஸ்பெக்டர் அனுராதா தலைமையில், போலீசார் பக்தர்கள் கூட்டத்தை ஒழுங்குப்படுத்திக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த தற்காலிக ஊழியர் சுப்பிரமணி (40)  பெண் இன்ஸ்பெக்டரிடம், ‘இவர்களை வரிசையில் நிறுத்த நீங்கள் யார்?’ என கேட்டு தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.இது குறித்து ஆரணி போலீசில் இன்ஸ்பெக்டர் அனுராதா புகாரளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து சுப்பிரமணியை கைது செய்தனர்.

× RELATED 3 ஆயிரம் லஞ்சம்: பெண் இன்ஸ்பெக்டர் கைது