சாலவாக்கம் அரசு பள்ளியில் 358 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்

உத்திரமேரூர், ஜன.11: உத்திரமேரூர் அடுத்த சாலவாக்கத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடந்தது. விழாவில் தலைமை ஆசிரியர் ஜெயரூபி தலைமை தாங்கினார். ஒன்றிய  செயலாளர் டி.குமார், ஊராட்சி செயலர் சக்திவேல், மாணவரணி முரளி, பொறியாளர் அணி விஷ்ணு, மாவட்ட பிரதிநிதி நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காஞ்சி திமுக மேற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ  கலந்து கொண்டு பள்ளியில் தேசிய கொடியினை ஏற்றி வைத்து பள்ளி மாணவர்களின் அணிவகுப்பு மறியாதையினை ஏற்றுக் கொண்டார்.பின்னர் பள்ளியில் பயிலும் 358 மாணவ - மாணவியர்களுக்கு சைக்கிள்கள் வழங்கி  சிறப்புரையாற்றினார்.

 இதில் வரவிருக்கும் பொதுத் தேர்வில் மாணவ-மாணவியர்கள் அனைவரும் சிறந்த முறையில் தேர்வு எழுதி அதிக மதிப்பெண்ணில் தேர்ச்சி பெற்று மாவட்டத்தில் முதலிடம் பெற வேண்டும் என்றார். இதனைத் தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்று நட்டு வைத்தார். நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பக்தவச்சலம், பள்ளி ஆசிரியர்கள் மாணவ- மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

× RELATED 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி...