மணல் கடத்தலை தடுக்க முயன்ற காவலரை லாரி ஏற்றி கொல்ல முயன்ற டிரைவர் கைது

காஞ்சிபுரம், ஜன.11: காஞ்சிபுரத்தை அடுத்த தைப்பாக்கம் மங்கல் கால்வாயில் லாரியில்  மணல் அள்ளப்படுவதாக பாலுசெட்டிசத்திரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதனைத் தொடர்ந்து பாலுசெட்டிசத்திரம் காவல்நிலைய இரண்டாம் நிலைக்காவலர் தாமாரன் நேற்று சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றார். அப்போது லாரியில் ஒருவர் மணல் அள்ளிக்கொண்டு இருந்தார். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது வாக்குவாதம் செய்தவர் திடீரென லாரியை இயக்கி காவலர் தாமாரன் வந்த டூ வீலர் மீது மோதுவதுபோல் வந்தார். சுதாரித்த தாமாரன் ஓரமாக ஒதுங்கிவிட்டார். இதனைத் தொடர்ந்து  பாலுசெட்டிச்சத்திரம் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தார். உடனடியாக விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் பிரபாகர் லாரியை மடக்கிப் பிடித்தார்.  முட்டவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் மகன் டிரைவர் ராஜ்குமார்  (25) என்பவரை கைது செய்தார். இதனைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த இன்ஸ்பெக்டர் பிரபாகர் மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியை பறிமுதல் செய்தார்.× RELATED இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து சபாநாயகரின் கார் டிரைவர் கைது