பட்டாபிராம் பெட்ரோல் பங்க்கில் மாணவனை வெட்டிய 4 பேர் பிடிபட்டனர்

ஆவடி, ஜன. 11: ஆவடி அடுத்த பட்டாபிராம், கோபாலபுரம், சித்தேரிகரை பகுதியை சேர்ந்தவர் புருஷோத்தமன் (18). அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள அரசு ஐடிஐ நிறுவனத்தில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். மேலும் பகுதி  நேரமாக பட்டாபிராம், சிடிஎச் சாலையில் பெட்ரோல் பங்க்கில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 8ம் தேதி இரவு புருஷோத்தம்மன் விற்பனை நிலையத்தில் ஆட்டோவிற்கு பெட்ரோல் நிரப்பி கொண்டு இருந்தார்.அப்போது ஒரு ஆட்டோவில் வந்த நபர்கள், தங்களது வாகனத்திற்கு உடனடியாக நிரப்ப வேண்டும் என கூறியுள்ளனர். அதற்கு புருஷோத்தமன் வரிசையில் வருமாறு கூறியுள்ளார். இதனையடுத்து அவரிடம் ஆட்டோவில் வந்த 4  பேர் கும்பல் தகராறு செய்துள்ளனர். பின்னர் ஆட்டோவில் இருந்த பட்டாக்கத்தியால் புருஷோத்தமனை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றனர்.

புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் பழனி தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெட்ரோல் பங்க்கில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா மூலம், விசாரணை நடத்தினார். விசாரணையில் புருஷோத்தமனை வெட்டியதாக ஆவடி, சேக்காடு, ராஜீவ்காந்தி நகரை சேர்ந்த பிரமோத் (22), பட்டாபிராம், சார்லஸ் நகரை சேர்ந்த சதிஷ் (27), வேப்பம்பட்டு, நேரு நகர், 4வது தெருவை சேர்ந்த அப்பன் (24),  செவ்வாப்பேட்டை, வெள்ளக்குளத்தை சேர்ந்த கார்த்தி ((23) ஆகியோர் என தெரிந்தது. தலைமறைவாக இருந்த 4 வாலிபர்களையும் போலீசார் நேற்று மாலை கைது செய்தனர்.

× RELATED கள்ளக்குறிச்சி அருகே 12-ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை