செல்போன் கடையில் ₹2.50 லட்சம் கொள்ளை

சென்னை, ஜன. 11: சென்னை கொருக்குப்பேட்டை ஜீவா நகர் 2வது தெருவில் உள்ள செல்போன் கடையை உடைத்து 120 செல்போன்கள் மற்றும் கல்லா பெட்டியில் இருந்த ₹2.50 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்ற  மர்ம நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை கொருக்குப்பேட்டை ஜீவாநகர் சத்தியமூர்த்தி தெருவை சேர்ந்தவர் நாகூர் மீரான் (34). அதே பகுதி 2வது தெருவில் செல்போன் கடை நடத்தி வருகிறார். நேற்று காலை கடையை திறக்க வந்தபோது முன்பக்க கதவு  உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, ஷோகேசில் இருந்த 120 செல்போன்கள் மற்றும் கல்லா பெட்டியில் இருந்த ₹2.50 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்த  புகாரின்பேரில் ஆர்.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.


× RELATED கோயில் உண்டியலை உடைத்து கொள்ளை