ஆர்எம்கே குழுமம், நியூக்ளியஸ் கம்யூனிகேஷன்ஸ் இடையே தொழில், கல்வி மேம்பட புரிந்துணர்வு ஒப்பந்தம்

திருவள்ளூர், ஜன 11: கவரப்பேட்டை ஆ.எம்.கே கல்வி குழும நிறுவனங்களுக்கும், சென்னை நியூக்ளியஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துக்கும் இடையே தொழில், கல்வி மேம்பட புரிந்துணர்வு ஒப்பந்தம் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு கல்விக்குழும நிறுவன தலைவர் ஆர்.எஸ்.முனிரத்தினம் தலைமை வகித்தார். \துணைத்தலைவர் ஆர்.எம்.கிஷோர், கல்லூரி ஆலோசகர்கள்  எம்.எஸ்.பழனிச்சாமி, வி.மனோகரன் முன்னிலை வகித்தனர். கல்லூரிகளின் முதல்வர்கள் கே.ஏ.முகமது ஜுனைத், டி.ரெங்கராஜா, அன்புச்செழியன் ஆகியோர், டீன்  சந்திரசேகரன் வரவேற்றனர்.இதில் ஆர்.எம்.கே கல்விக்குழும நிறுவனங்களின் தலைவர் ஆர்.எஸ்.முனிரத்தினம், சென்னை நியூக்ளியஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவன பொது மேலாளர் கே.ஏழுமலை ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு  கோப்புகளை மாற்றிக்கொண்டனர். தொழில், கல்வி நல்லுறவு பரஸ்பரம் மேம்படவும், இரு நிறுவனங்களும் மேம்பாடு அடைய பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துவது இந்த ஒப்பந்தத்தின் நோக்கமாகும். முடிவில், வேலைவாய்ப்பு அலுவலர் கே.சிவஞானபிரபு நன்றி கூறினார்.


× RELATED தஞ்சையில் புதிய கல்விக் கொள்கைக்கு...