திருவள்ளூர் சுற்றுவட்டார பகுதிகளில் சத்துணவு மையங்களில் காஸ் அடுப்புகள் பழுது: பணியாளர்கள் கடும் அவதி

திருவள்ளூர், ஜன 11: திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள சத்துணவு மையங்களில் காஸ் அடுப்புகள் பழுதடைந்து உள்ளதால், விறகு அடுப்பு சமையல் மட்டுமே தொடர்கிறது.கடந்த காலங்களில் சத்துணவு மையங்களில் சமையல் செய்வதற்கு விறகு வாங்க தனியாக தொகை வழங்கப்பட்டு வந்தது. இத்தொகை மிகவும் குறைவாக இருந்த போதும், சத்துணவு அமைப்பாளர்கள் தங்களது சம்பள  பணத்தில், விறகுக்கான தொகையினை வழங்கி வந்தனர்.இந்நிலையில் விறகு கிடைப்பதில் ஏற்பட்ட பிரச்னையாலும், சுற்றுச்சூழல் பாதிப்பை கட்டுப்படுத்தும் நோக்கிலும் அரசு மூலம் ஒவ்வொரு சத்துணவு மையங்களுக்கும் இரண்டு காஸ் சிலிண்டர்கள், ஒரு அடுப்பு வழங்கப்பட்டது. ஆனால், சிலிண்டர் வாங்குவதற்கான தொகை வழங்காத நிலையில், ஒரு சில மாதங்கள் மட்டுமே காஸ் அடுப்பு பயன்படுத்தப்பட்டது.இதனால் பல இடங்களில் பயன்படுத்தாமல் அடுப்புகள் பழுதடைந்து உள்ளதால், சமையல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மீண்டும் விறகு அடுப்பு மூலம் சமையல் செய்யும் நிலைக்கு சத்துணவு சமையலர்கள்  தள்ளப்பட்டுள்ளனர்.

எனவே பழுதடைந்த அடுப்புகளை சீரமைக்க குறைந்தது, ₹2000 தேவைப்படும் நிலையில் அதற்கான செலவின தொகையை வழங்க சம்பந்தப்பட்ட நிர்வாகம் முன்வரவில்லை. இதன் மூலம் காஸ் அடுப்புகள் வழங்க ஒப்பந்தம் போடப்பட்ட ஒப்பந்ததாரர் மட்டுமே லாபம் அடைந்துள்ளதும், சத்துணவு பணியாளர்கள் அவதிப்படுகின்றனர். எனவே, இதில், உள்ள பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

× RELATED சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர்...