வரும் 23ம் தேதி குப்பம்கண்டிகையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்: கலெக்டர் அறிவிப்பு

திருவள்ளூர், ஜன. 11: திருத்தணி தாலுகாவில் அடங்கிய, மணவூர் மதுராவுக்கு உட்பட்ட குப்பம்கண்டிகை கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் வரும் 23ம் தேதி நடக்க உள்ளதாக கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார்  அறிவித்து உள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: திருத்தணி தாலுகா, மணவூர் மதுராவுக்கு உட்பட்ட குப்பம்கண்டிகை கிராமத்தில் செங்காணிஅம்மன் அம்மன் கோயில் அருகில், கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில்,  வரும் 23ம் தேதி காலை 10 மணியளவில் மக்கள் தொடர்பு திட்டம் நடைபெற உள்ளது. அது சமயம் அனைத்துத்துறை மாவட்ட அளவிலான அலுவலர்கள் பங்கேற்க உள்ளார்கள்.எனவே பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகளை மாவட்ட கலெக்டரிடம் மனுக்களாக அளிக்கலாம். இந்த வாய்ப்பை பொதுமக்கள்பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.


× RELATED கலெக்டருக்கு கடிதம் அனுப்பி திருமணத்தை நிறுத்திய மைனர் பெண்