பைக் விபத்தில் படுகாயம் அடைந்த ஊழியருக்கு ₹41 லட்சம் இழப்பீடு: நீதிமன்றம் உத்தரவு

ு/சென்னை, ஜன. 11: சென்னை அண்ணாநகர் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் ரவி. தனியார் நிறுவன கான்ட்ராக்டர். கடந்த 2014ம் ஆண்டு திருமுல்லைவாயல் அருகே இருசக்கர வாகனத்தில் ரவி சென்றபோது, எதிரில்  ேவகமாக வந்த மற்றொரு பைக் ரவியின் பைக் மீது மோதியது. இதில் ரவிக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ரவியை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரவிக்கு பல லட்சம் செலவு செய்து சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் அவருக்கு உடல்நிலை  சரியாகவில்லை.  கழுத்தை திருப்ப முடியாமலும், நடக்க முடியாமலும் அவதிப்பட்டார்.

இதையடுத்து தனக்கு ₹60 லட்சம் இழப்பீடு கோரி சென்னையில் உள்ள மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் ரவி வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு நீதிபதி ரேவதி முன்னிலையில் விசாரணைக்கு  வந்தது. விசாரித்த நீதிபதி, ரவி தனியார் நிறுவனத்தில் உயர் பதவியில் பணி செய்துள்ளார். மாதம் ₹35 ஆயிரம் சம்பளம் வாங்கியுள்ளார்மேலும் உடல் நிலையில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே இன்சூரன்ஸ் நிறுவனம் ₹41 லட்சத்து 78 ஆயிரத்து 700 இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
× RELATED ராஜஸ்தானில் கூடாரம் சரிந்த விபத்து : இழப்பீடு அறிவிப்பு