ரவுடி சுற்றிவளைப்பு எஸ்ஐ கை முறிந்தது

சென்னை, ஜன. 11: சென்னை, டி.பி.சத்திரத்தை சேர்ந்தவர் தீச்சட்டி முருகன் (40). கடந்த 2017 ஜனவரி 30ம் தேதி ரவுடிகளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக ஷனாய் நகர், எச்.பிளாக்கை சேர்ந்த பிரபல ரவுடி  ராஜேஷ் (எ) ராஜேஷ்குமார் (24) என்பவரை போலீசார் தேடி வந்தனர். நேற்று முன்தினம் இரவு தனது வீட்டுக்கு ராஜேஷ்குமார் வந்திருப்பதாக தகவல் கிடைத்தது. போலீசார் ராஜேஷ்குமாரை பிடித்த போது எஸ்.ஐ சுபாஷ், கான்ஸ்டபிள் மதியழகன் இருவரையும் தள்ளிவிட்டு தப்பிக்க முயன்றார்.  ஆனாலும் போலீசார் மடக்கி பிடித்தனர். இதில் ராஜேஷ்குமார் தாக்கியதில் எஸ்.ஐ சுபாஷின் கை எலும்பு முறிந்தது. கான்ஸ்டபிள் இடுப்பில் படுகாயம் ஏற்பட்டது.× RELATED கவலையில்லாதவர் கையில் ஆட்சி : மு.க.ஸ்டாலின் ‘டிவிட்’