சென்னை- புதுச்ேசரி விரைவு ரயில் கிண்டி, மாம்பலத்தில் நின்று செல்லும்

சென்னை: சென்னை - புதுச்ேசரி விரைவு ரயில் கிண்டி மற்றும் மாம்பலம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.சென்னை கடற்கரையிலிருந்து புதுச்சேரிக்கு தினசரி விரைவு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் (16115) தினசரி மதியம் 5.35 மணிக்கு கடற்கரையிலிருந்து புறப்பட்டு 6.22 மணிக்கு மாம்பலம் ரயில் நிலையத்திலும், 6.30க்கு கிண்டி  ரயில் நிலையத்திலும் நின்று செல்லும். மறு மார்க்கத்தில் புதுச்சேரியிலிருந்து வரும்போது காலை 5.35 மணிக்கு  புறப்பட்டு 9.03 மணிக்கு கிண்டி ரயில் நிலையத்திலும், 9.10 மணிக்கு மாம்பலம் ரயில் நிலையத்திலும் நின்று  செல்லும்.  இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Advertising
Advertising

Related Stories: