1000 ரூபாய் கொள்ளைக்கு திட்டம் ரேஷன் கடையில் முந்திரி, திராட்சை இருந்ததால் மர்ம நபர்கள் ஏமாற்றம்: கரும்பை சாப்பிட்டு ஆறுதல்

சென்னை: மறைமலைநகர் அருகே ரேஷன் கடையில் மர்ம நபர்கள் ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு தொகையை கொள்ளை அடிக்க சென்றனர். அங்கு பணம் இல்லாததால் முந்திரி, திராட்சையை தூக்கி சென்ற சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது.

மறைமலைநகர் அடுத்த செட்டிபுண்ணியத்தில் மகளிர் சிறப்பு உதவிக் குழுக்களால் நடத்தப்படும் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு 1500க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். கடந்த 4 நாட்களாக இங்கு  தமிழக அரசு சார்பில் பொங்கல் பை மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் வழங்கப்பட்டு வருகிறது.
Advertising
Advertising

இந்நிலையில், நேற்று காலை ஊழியர்கள் வழக்கம் போல கடையை திறக்க வந்தனர். அப்போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே பொருட்கள் சிதறிக்கிடந்தன. தகவல் அறிந்து மறைமலைநகர் போலீசார் வந்து சோதனை செய்தபோது பொங்கலுக்கு வழங்க ரொக்க பணம் இருப்பு இருக்கும் என்று நினைத்து மர்ம நபர்கள் கொள்ளை முயற்சில் ஈடுபட்டது தெரிந்தது. மேலும், கடையில்  பணம் இருப்பு இல்லாததால் கரும்பு துண்டுகளை சாப்பிட்டுவிட்டு முந்திரி, ஏலக்காய், திராட்சை, சர்க்கரை ஆகியவற்றை தூக்கி சென்றுள்ளனர். இதன் மதிப்பு ரூ.20 ஆயிரம் இருக்கும் என்று கூறப்படுகிறது.இதுதொடர்பாக, போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Related Stories: