வாகன சோதனையில் பறிமுதல் செய்த கார் தீப்பிடித்ததால் பரபரப்பு

சென்னை: வாகன சோதனையின் போது போலீசாரால் பறிமுதல் ெசய்யப்பட்ட கார் ஒன்று, திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் வடபழனியில் பரபரப்பை ஏற்படுத்தியது.சென்னை கோடம்பாக்கம் போக்குவரத்து ஆய்வாளர் சுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் ேநற்று முன்தினம் இரவு வடபழனி 100 அடி சாலையில் நெற்குன்றம் பாதை சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.  அப்போது சாலையில் அதிவேகமாக கார் ஒன்று வந்தது. அதை பார்த்த போக்குவரத்து போலீசார் காரை வழிமறித்து தடுத்து விசாரித்தனர்.

அப்போது, தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியை சேர்ந்த மதராசன் (27) காரை குடிபோதையில் ஓட்டி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போக்குவரத்து ஆய்வாளர் சுப்பிரமணியன் குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்த  மதராசன் மீது வழக்கு பதிவு செய்து காரை பறிமுதல் செய்தனர். பின்னர் கார் ஆற்காடு சாலையில் ஓரமாக நிறுத்தப்பட்டது. ேநற்று அதிகாலை 3.20 மணிக்கு திடீரென கார் தீப்பற்றி எரிவதாக பொதுமக்கள் வடபழனி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அந்த வழியாக வந்த தண்ணீர் லாரியை நிறுத்தி தீயை அணைத்தனர். இதுகுறித்து வடபழனி போலீசார் வழக்கு பதிவு செய்து, சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் விசாரணை நடத்துகின்றனர்.

Related Stories: