ஆலந்தூர் திமுக சார்பில் நங்கநல்லூரில் பொங்கல் விழா

ஆலந்தூர்: ஆலந்தூர் தெற்கு பகுதி திமுக சார்பில், நங்கநல்லூர், பக்தவத்சலம் நகரில் நேற்று காலை பொங்கல் விழா நடந்தது. பகுதி செயலாளர் என்.சந்திரன் தலைமை தாங்கினார். வட்ட செயலாளர்கள் நடராஜன், வரதராஜன்,  ஏசுதாஸ், ஆலந்தூர் தெற்கு மண்டல காங்கிரஸ் தலைவர் சீதாபதி முன்னிலை வகித்தனர். இதில் அமைப்புச் செயலாளரும், மாநிலங்களவை எம்பியுமான ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டு, பொங்கல் வைத்தார். அப்போது மகளிரணியினர் ‘பொங்கலோ பொங்கல்’ என குலவையிட்டனர். காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட  திமுக செயலாளர் தா.மோ.அன்பரசன் எம்எல்ஏ கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு சர்க்கரை பொங்கல் மற்றும் இலவச வேட்டி-சேலைகளை வழங்கினார். வடக்கு பகுதி செயலாளர் குணாளன், எம்எஸ்கே.இப்ராஹிம், கீதா ஆனந்த், கிரிஜா பெருமாள், நாகராஜசோழன், முத்து, உலகநாதன், ஜெகதீஸ்வரன், காந்த், பாஸ்கர், லயன் ரத்தினம், ஜெயக்குமார் உட்பட பலர் கலந்து  கொண்டனர்.

Advertising
Advertising

Related Stories: