ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் எலக்ட்ரிக் ஆட்டோ சேவை துவக்கம்

ஆலந்தூர்: ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து ஆலந்தூர், பரங்கிமலை, நந்தம்பாக்கம், மணப்பாக்கம் போன்ற பகுதிகளுக்கு செல்ல எலக்ட்ரிக் ஆட்டோ சேவை துவக்க விழா நேற்று காலை ரயில் நிலைய வளாகத்தில்  நடந்தது.மெட்ரோ ரயில் நிறுவன இயக்குநர் நரசிம்ம பிரசாத், நம்ம ஆட்டோ திட்ட இயக்குநர் மஞ்சு மேனன் ஆகியோர் கொடியசைத்து எலக்ட்ரிக் ஆட்டோ சேவையை துவக்கி வைத்தனர்.அப்போது, நரசிம்ம பிரசாத் பேசுகையில், மெட்ரோ ரயில் பயணிகளின் வசதிக்காக, இந்த எலக்ட்ரிக் ஆட்டோ சேவை துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

இன்று (நேற்று) மட்டும் ரயில் பயணிகள் இலவசமாக பயணிக்க  அனுமதிக்கப்படுகிறது. இந்த ஆட்டோவில் பணிபுரியும் டிரைவர்களுக்கு 8 மணி நேரத்துக்கு ₹800 சம்பளம் வழங்கப்படுகிறது. மேலும், ஆட்டோவில் பொருத்தப்பட்ட பேட்டரியை 4 மணி நேரம் சார்ஜ் செய்தால், 80-100 கிமீ தூரம்  வரை ஓடும். இத்திட்டம் வெற்றி பெறும் நிலையில், அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் விரிவுபடுத்தப்படும். இந்த ஆட்டோக்களை மெட்ரோ ரயில் பயணிகள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்றார்.


× RELATED ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் எலக்ட்ரிக் ஆட்டோ சேவை துவக்கம்