மீனவர் கொலையில் மேலும் 2 பேர் கைது

சென்னை: செய்யூர் அருகே நடந்த மீனவர் கொலை வழக்கில் மேலும் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் அடுத்த கடப்பாக்கம் மீனவர் குப்பம், ஆலம்பரைகோட்டை குப்பம் மீனவர்கள் இடையே எல்லை பிரச்னை, அடிதடி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக நீண்ட காலமாக முன்விரோதம்  இருந்து வருகிறது.

இந்நிலையில், ஆலம்பரைகோட்டை குப்பத்தை சேர்ந்த மீனவர் தேசிங்கை கடந்த 7ம் தேதி கடப்பாக்கம் மீனவர் குப்பத்தை சேர்ந்த சிலர் வெட்டி கொலை செய்தனர். இவ்வழக்கில் கடப்பாக்கம் மீனவர் குப்பத்தை சேர்ந்த 6 பேரை  போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், இக்கொலை வழக்கு தொடர்பாக கடப்பாக்கம் மீனவர் குப்பத்தை சேர்ந்த மேலும் 2 பேரை சூனாம்பேடு போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.× RELATED மீனவ முதியோருக்கு ஓய்வூதியம்