மணல் கடத்திய லாரி டிரைவர் கைது

தூத்துக்குடி, ஜன.11:தூத்துக்குடி சிப்காட் எஸ்ஐ முத்து கணேஷ்,போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மடத்தூர் பகுதியில் வந்த லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். விசாரணையில் விருதுநகர் மாவட்டத்தில் இருந்து முறையான ஆவணங்கள் இல்லாமல் தூத்துக்குடிக்கு லாரியில் ஆற்று மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் லாரி டிரைவர் மார்த்தாண்டத்தைச் சேர்ந்த மோகன் குமார்(48) என்பவரை கைது செய்தனர். மேலும் இதற்கு உதவியாக இருந்ததாக மார்த்தாண்டத்தை சேர்ந்த பாரதிராஜன், தூத்துக்குடி முத்தையாபுரத்தை சேர்ந்த கனகராஜ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

× RELATED ரூ.30 மட்டும் லஞ்சம் தந்ததால் லாரி டிரைவர் சுட்டுக்கொலை