வறட்சி பாதித்த பயிர்களுக்கு நிவாரணம் கோரி கோவில்பட்டி ஆர்டிஓ அலுவலகம் முற்றுகை

கோவில்பட்டி, ஜன. 11:  கோவில்பட்டியில் வறட்சி பாதித்த அனைத்து பயிர்களுக்கும் ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம் நிவாரணம் வழங்கக்கோரி விவசாயிகள் மாட்டு வண்டியில் சென்று ஆர்.டி.ஓ. அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.  கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் இந்தாண்டு போதிய மழையின்மை, நோய் தாக்குதல், கடும் வறட்சி மற்றும் பருவநிலை மாற்றத்தால் மானாவாரி விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.  மானாவாரி விவசாயத்தில் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து பயிர்களுக்கும் ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.

டிராக்டர், டிராக்டர் உதிரிபாகங்கள், கதிர் அடிக்கும் இயந்திரங்கள், உழவு பொருள்கள் போன்ற அனைத்து விவசாய கருவிகளுக்கும் மத்திய அரசு ஜிஎஸ்டி  5 சதவீதற்குள்ளாக வரிவிதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை  வலியுறுத்தி விவசாயிகள் மாட்டுவண்டியில் ஊர்வலமாக சென்று கோவில்பட்டியில் ஆர்.டி.ஓ. அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதில் நாலாட்டின்புதூர், வில்லிசேரி, இடைசெவல், அய்யனேரி உள்ளிட்ட பல்வேறு கிராம விவசாயிகள் திரளாகப் பங்கேற்று கோஷமிட்டனர். பின்னர் ளது கோரிக்கை மனுவை ஆர்.டி.ஓ. விஜயாவிடம் அளித்தனர்.
× RELATED குடிதண்ணீர் வழங்கக் கோரி கலெக்டர்...