மணிநகர் பிரசன்ன ஆலய பிரதிஷ்டை விழா

நாசரேத். ஜன.11:மணிநகர் பிரசன்ன ஆலய பிரதிஷ்டை விழாவில் பேராயர் தேவசகாயம் கலந்து கொண்டார். தூத்துக்குடி- நாசரேத் திருமண்டலம், நாசரேத் சேகரம் மணிநகர் சபை பிரசன்ன ஆலய 50வது பிரதிஷ்டை , 35வது அசன பண்டிகை நிகழ்ச்சி 7 நாட்கள் நடந்தது. முதல் 3 நாட்கள் இரவு 7 மணிக்கு கன்வென்ஷன் கூட்டம் நடந்தது. இதில் சென்னை அன்னனூர் குருவானவர் டேவிட் சாலமோன், சென்னை சர்வ வல்லவரின் நிழலில் ஜெபக்குழு ஊழியர் சார்லஸ் ஆகியோர் சிறப்புசெய்தி கொடுத்தனர்.  4வது நாள் மாலை 6.30 மணிக்கு ஆயத்த ஆராதனையும் இரவு 8 மணிக்கு ஐ.எம்.எஸ் கலைநிகழ்ச்சியும் நடந்தது. 5வது நாள் காலை 10 மணிக்கு ஆலய பிரதிஷ்டை, திருவிருந்து, ஞானஸ்நான ஆராதனை நடந்தது. தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல பேராயர் தேவ

சகாயம் ஆராதனையை தலைமை வகித்து நடத்தி சிறப்புசெய்தி கொடுத்தார். மாலை 6 மணிக்கு வேத வினாடி போட்டியும் இரவு 8 மணிக்கு அனிஜேன்ஆக்ஸ்வித் பார்வைதிறன் குறைந்தோர் நடத்திய இசை நிகழ்ச்சி நடந்தது. 6வது நாள் மாலை 5 மணிக்கு ஆலய வளாகத்தில் அசனவிருந்து நிகழ்ச்சி நடந்தது. தூய யோவான் பேராலய தலைமை குரு எட்வின் ஜெபராஜ் ஜெபித்து அசனவிருந்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் ஏராளமானோர் பங்கேற்றனர். 7வது நாள் காலை 9 மணிக்கு வாலிப ஆண்கள், பெண்கள் பண்டிகை நடந்தது. இரவு 8 மணிக்கு சபை மக்கள் சார்பில் கலைநிகழ்ச்சி நடந்தது.


× RELATED கஞ்சா, மது விற்ற முதியவர்கள் கைது