மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மதிப்பீட்டு முகாம்

ஸ்பிக்நகர், ஜன. 11: தூத்துக்குடி ஸ்பிக் நகர் ஜிம்கானாவில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மதிப்பீட்டு முகாம் நடந்தது.
 தூத்துக்குடி ஸ்பிக் நகர் ரோட்டரி சங்கமும், கோவை மிட் டவுன் ரோட்டரி சங்கமும் ஆண்டுதோறும் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கைக்கால் மற்றும் ஊன்றுகோல் வழங்குவதற்காக சிறப்பு மதிப்பீட்டு முகாமை நடத்தி வருகின்றன. இதன்படி இந்தாண்டுக்கான சிறப்பு முகாம் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற 50க்கும் மேற்பட்டோருக்கு செயற்கைக்கால், ஊன்றுகோல் வழங்குவதற்காக அளவீடு மேற்கொள்ளப்பட்டது. முகாமில் ஸ்பிக் ஆலை தலைவர் பாலு, ரோட்டரி சங்கத் தலைவர் ரமேஷ், ஸ்பிக் நிர்வாகி மணிஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

× RELATED திருச்சியில் போலியாக பணி நியமன ஆணை வழங்கி ஏமாற்றிய 2 பேர் கைது