தேசிய விருது பெற்ற உடன்குடி வட்டார கல்வி அலுவலருக்கு பாராட்டு

உடன்குடி, ஜன.11: தேசிய விருது பெற்ற உடன்குடி வட்டார கல்வி அலுவலர் நம்பித்துரைக்கு பாராட்டு விழா நடந்தது. ஓய்வு பெற்ற வட்டாரக்கல்வி அலுவலர் தாசன்பொன்ராஜ் தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர்கள் ஜெயபாலன் தேவாசீர்வாம், முருகேஷ்வரி முன்னிலை வகித்தனர். உடன்குடி அரசு நடுநிலைப்பள்ளி தலைமைஆசிரியர் பிரின்ஸ் வரவேற்றார். தலைமைசிரியர்கள் சுபாஷ்சந்திரபோஸ், பர்வதாதேவி, வட்டார கல்விஅலுவலர்கள் ஜெசுராஜன் செல்வகுமார், ஜெயபாலன், முருகேஷ்வரி, தமிழகஆசிரியர் கூட்டணி திருச்செந்தூர் கல்வி மாவட்ட செயலாளர் ராஜசிங்பாஸ்கர், சலீம், ஆகியோர் வாழ்த்திப்பேசினர். நிகழ்ச்சியினை கீழராமசாமியாபுரம் புனிதஅன்னாள் தொடக்கப்பள்ளி தலைமைஆசிரியர் தேவ
இருதயஆல்பர்ட் தொகுத்து வழங்கினார். மேலராமசாமியாபுரம் தூநாதிஅக பள்ளி தலைமை ஆசிரியர் இம்மானுவேல் நன்றி கூறினார்.

விழாவில் ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் சாமுவேல், பிச்சைமணிகோயில்ராஜ், உடன்குடி ஒன்றிய அனைத்துப்பள்ளி ஆசிரியர்கள், தலைமைஆசிரியர்கள் மற்றும் அலுவலகப்பணியாளர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை தமிழக ஆசிரியர் கூட்டணி திருச்செந்தூர் கல்வி மாவட்ட செயலாளர் ராஜசிங்பாஸ்கர் தலைமையில் உடன்குடி வட்டார பொறுப்பாளர்கள் சாமுவேல்கிறிஸ்டோபர், ஜாஸ்பர்இம்மானுவேல், ரெத்தினராஜ், ஞானசேகர், ஜோயல், மரியநாயகம், ஜேம்ஸ், சுப்பையா, மீரான், ஞானராஜ், மைக்கேல்ராஜ் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் செய்திருந்தனர்.

× RELATED உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததால் செயல்படாத உடன்குடி யூனியன் நிர்வாகம்