தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் இன்றும், நாளையும் ஊராட்சி சபை கூட்டங்கள்

தூத்துக்குடி, ஜன.11:தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ., வெளியிட்டுள்ள அறிக்கை:திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பாக ஊராட்சி சபைக் கூட்டங்கள் கீழ்க்கண்ட தேதிகளில் அறிவிக்கப்பட்ட இடங்களில் நடைபெற உள்ளது. அனைத்து கூட்டங்களிலும் நாமக்கல் ராஜேஷ் கலந்து கொள்கிறார். அதன்படி இன்று (11ம் தேதி) மாலை 4 மணிக்கு விளாத்திகுளம் மேற்கு கே.சுந்தரேஸ்வரபுரத்திலும், 5 மணிக்கு வில்வமரத்துப்பட்டியிலும், 6 மணிக்கு அயன்பொம்மையாபுரம் பகுதியிலும், இரவு 7 மணி ஜமீன்கரிசல்குளம் பகுதியிலும், விளாத்திகுளம் குருவார்பட்டி பகுதியில் 8 மணிக்கும் கூட்டம் நடக்கிறது. நாளை (12ம் தேதி) மாலை 4 மணிக்கு கோவில்பட்டி கிழக்கு ஒன்றியத்திலுள்ள கீழஈரால் பகுதியிலும், 5 மணிக்கு சுரைக்காய்பட்டியிலும், 6 மணிக்கு ஈராச்சியிலும், இரவு 7 மணிக்கு சிதம்பராபுரத்திலும், 8.30 மணி கடலையூர் பகுதியிலும் ஊராட்சி சபைக் கூட்டங்கள் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

× RELATED அதிமுக சார்பில் மேட்டூர் ஆஞ்சநேயர் கோயிலில் யாகம்