மாநில கடற்கரை கைப்பந்து போட்டி தூத்துக்குடி பள்ளி மாணவர்கள் தகுதி

தூத்துக்குடி, ஜன.11:மண்டல அளவிலான கடற்கரை கைப்பந்து போட்டிகள் தருவைகுளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இதில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பள்ளிகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் சூப்பர் ஜீனியர் பிரிவில் தூத்துக்குடி கால்டுவெல் மேல்நிலைப்பள்ளி அணி வெற்றி பெற்று மாநில போட்டிக்கு தகுதி பெற்றது. இதில் கால்டுவெல் பள்ளி சார்பில் பங்கேற்று விளையாடிய மாணவர்கள் ஜேக்கப் ரெனி, முகேஷ், பயிற்சியாளர்கள் சீனிவாசன், பவுன், பள்ளி உடற்கல்வி இயக்குநர் பெலின் பாஸ்கர், உடற்கல்வி ஆசிரியர்கள் மதுரம், அதனாசியஸ் ஆகியோரை பள்ளி தாளளர் செல்லப்பாண்டியன், தலைமை ஆசிரியர் ஜேக்கப் மனோகர் மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் பாராட்டினர்.

× RELATED ஒலி பெருக்கி தொல்லையால் பள்ளி மாணவர்கள் அவதி