தெற்கு மாவட்ட திமுக சார்பில் இன்றும், நாளையும் ஊராட்சி சபை கூட்டம் நடைபெறும் இடங்கள்

தூத்துக்குடி, ஜன.11:தூத்துக்குடி தெற்குமாவட்ட திமுக சார்பில் இன்றும், நாளையும் நடைபெற உள்ள ஊராட்சி சபை கூட்டங்கள் குறித்து பொறுப்பாளர் அனிதாராதாகிருஷ்ணன் எம்எல்ஏ அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பாக அனைத்து கிராமங்களிலும் ஊராட்சி சபை கூட்டம் நடத்தி மக்களை சந்தித்து உண்மையை எடுத்துரைக்க திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் ஊராட்சி சபைக் கூட்டங்கள் எனது தலைமையில் நடைபெற உள்ளது.

அதன்படி இன்று (11ம் தேதி) திருச்செந்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட நல்லூர் ஊராட்சியில் மாலை 5 மணிக்கும், வீரமாணிக்கம் ஊராட்சியில் 6 மணிக்கும், மேலப்புதுக்குடி ஊராட்சியில் இரவு 7 மணிக்கும் கூட்டம் நடைபெறுகிறது. நாளை (12ம் தேதி) உடன்குடி ஒன்றியத்திற்குட்பட்ட மெஞ்ஞானபுரம் ஊராட்சியில் மாலை 5 மணிக்கும், செம்மறிக்குளம் ஊராட்சியில் இரவு 7 மணிக்கும் ஊராட்சி சபை கூட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

× RELATED கிராம சபை கூட்டம் கட்சியினருக்கு கமல்ஹாசன் உத்தரவு