தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பொங்கல் விழா கொண்டாட்டம்

தூத்துக்குடி, ஜன.11:தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இது தொடர்பாக தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தைத் திருநாளை முன்னிட்டு பொங்கல் விழா தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. வங்கியின் பெண் அலுவலர்கள் இணைந்து அழகிய வண்ணக் கோலங்களிட்டு பொங்கல் வைத்து விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் வழங்கினர்.விழாவில், வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி, துணைத்தலைவர், வங்கியின் பொதுமேலாளர்கள், துணை பொதுமேலாளர்கள், உதவிப் பொதுமேலாளர்கள், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். விழாவில் நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகளும் இடம் பெற்றன. ஏற்பாடுகளை தலைமை அலுவலக அதிகாரிகள், ஊழியர்கள் செய்திருந்தனர்.

× RELATED கடந்த நிதியாண்டில் புதிய சாதனை...