தூத்துக்குடியில் யுபிஎஸ்சி, சிடிஎஸ்இ தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள்

தூத்துக்குடி, ஜன.11:தூத்துக்குடி மாவட்ட முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு யு.பி.எஸ்.சி. மற்றும் சி.டி.எஸ்.இ. தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது.இது தொடர்பாக கலெக்டர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:யு.பி.எஸ்.சி சார்பில் பிப்ரவரி 3ம்தேதி நடைபெறும் சி.டி.எஸ்.இ தேர்விற்கு இணையதளம் மூலம் ஏற்கனவே விண்ணப்பித்த முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு 10 முதல் 15 நாட்கள் சென்னை முன்னாள் படைவீரர் நல இயக்ககம் மூலமாக இலவசமாக பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. இந்த பயிற்சி வகுப்பில், தேர்விற்கு விண்ணப்பித்த முன்னாள் படைவீரர்களின் சிறார்கள் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு தூத்துக்குடி முன்னாள் படைவீரர் நலன் உதவி இயக்குநரை விண்ணப்பத்தின் நகலுடன் நேரில் தொடர்பு கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.

× RELATED தூத்துக்குடியில் தண்ணீர் பஞ்சத்தால்...