கயத்தாறில் காலாவதியான தின்பண்டங்கள் பறிமுதல்

கயத்தாறு, ஜன. 11:   கயத்தாறில்  தனியார் குடோனில் நடத்திய சோதனையில்  காலாவதியான திண்பண்டங்களை உணவு பாதுகாப்பு அதிகாரி பறிமுதல் செய்தார்.  கயத்தாறு வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் நாகசுப்பிரமணியன் தலைமையில் வி.ஏ.ஓ.ராஜசேகர், பஞ். மேஸ்திரி செல்லத்துரை ஆகியோர் தொடர் சோதனை நடத்தி வருகின்றனர். கடம்பூர் ரோட்டில் உள்ள தனியார் மொத்த விற்பனை கடை மற்றும் குடோனில்  சோதனை நடத்தியதில்  காலாவதியான  தின்பண்டங்கள்  கடலை, ஜூஸ்பொரி, மிட்டாய்களை பறிமுதல் செய்தனர்.  மற்றொரு கடையில் 6 கிலோவுக்கும் அதிகமான பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து  பேரூராட்சி பணியாளர்களின் ரூ.30ஆயிரம்  மதிப்புள்ள காலாவதியான பொருள்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருள்கள்  அழிக்கப்பட்டது.

× RELATED பள்ளிகள் அருகே சுகாதாரமற்ற...