தருவைகுளத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல்

குளத்தூர், ஜன.11: குளத்தூரையடுத்த தருவைகுளம் கூட்டுறவு பண்டகசாலை மூலமாக தமிழக அரசு அறிவித்த பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1000 வழங்கினர். கூட்டுறவு பண்டகசாலை துணைத்தலைவர் அந்தோணிசாமி தலைமையில் செயலாளர் வேல்முருகன் முன்னிலையில் முன்னாள் அதிமுக ஒன்றிய கவுன்சிலரும் கூட்டுறவு பண்டகசாலை தலைவருமான அமலதாசன் பொங்கல் பரிசுகளை பொதுமக்களுக்கு வழங்கினார். மேலும் கூட்டுறவு பண்டகசாலை மூலம் உள்ள கீழஅரசடி, மேலஅரசடி, புதூர்பாண்டியாபுரம் ஆகிய கிராமங்களில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாயவிலைக்கடைகளில் பொங்கல் பரிசுகள் வழங்கினர். இயக்குநர்கள் சூசைமிக்கேல், ஆறுமுகச்சாமி, அமலா, தேவி, கல்வியின் கரங்கள் அறக்கட்டளையின் இயக்குநர் மார்செல்செரின், வைரமுத்து, செந்தூர், மிக்கேல், சுப்பிரமணியன் ஆகியோர் உடனிருந்தனர்.

× RELATED கஞ்சா, மது விற்ற முதியவர்கள் கைது