போலீசாரை மிரட்டிய இருவர் உள்பட 3 பேர் கைது

பாப்பாக்குடி, ஜன. 11:  முக்கூடல் அருகே உடையாம்புளி, சுடலை கோயில் பகுதியில் சிறப்பு எஸ்ஐ கணேசன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த டிராக்டரை மடக்கிய போது அதில் இருந்தவர்கள் டிராக்டரை நிறுத்திவிட்டு தப்பிச் சென்றனர்.  விசாரணையில் டிராக்டரில் அனுமதியின்றி ஓடை மணல் அள்ளி வந்ததும், தப்பிச் சென்றவர்கள் சிவலார்குளத்தை சேர்ந்த மதன்குமார், முத்துக்குமார், முருகன் (30), தாமரைக்கண்ணன் என்பதும் தெரிய வந்தது. இதுகுறித்து எஸ்ஐ மாரியப்பன் வழக்கு பதிந்து அவர்களை தேடி வந்தார். டிராக்டரும் பறிமுதல் செய்யப்பட்டது.  

Advertising
Advertising

நேற்று மருதம்புத்தூரில் நின்றிருந்த முருகனை போலீசார் கைது செய்தனர். அப்போது மானூர் தெற்குப்பட்டியை சேர்ந்த இசக்கிப்பாண்டி (29), ஹரி (21) ஆகியோர் அரிவாளை காட்டி போலீசாரை மிரட்டி உள்ளனர். இதையடுத்து இவர்கள் இருவரையும் (பொறுப்பு) இன்ஸ்பெக்டர் குமாரி சித்ரா கைது செய்தார். போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தது, அரிவாளை காட்டி கொலைமிரட்டல் விடுத்தது ஆகிய பிரிவுகளில் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Related Stories: